இரவி அருணாசலம்

அபூர்வமான அனுபவம் அடைந்தேன்.

நெஞ்சார ஒன்று சொல்கிறேன். சென்ற ஞாயிறு (4-5-08) நடந்த ஒரு நிகழ்வு, என்வாழ்வில் நேர்ந்த மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று. நெஞ்சு இனிக்க அந்த நாள் என்னில் பதிந்தது. “ஒரு பேப்பர்” இல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற வி.சபேசன் (ஜேர்மனி) அவர்கள் கலைநிதியை வதுவை புரிந்த அந்தத் தருணத்தையே மிக்க அபூர்வமான தருணம் என நான் குறிப்பிட்டேன். சனிக்கிழமை (3-5-08) காலையில் நாதன் அவர்களின் மகிழ்வுந்தில், கோபி, பார்த்தி, இளங்கோ, நாதன், நான் என ஒருபேப்பர்காரன்கள் [...]

துயர் சூழ்ந்த நாள் தொடர்கிறது

சென்ற ‘ஒரு பேப்பர்’ இல் புதிய உலகம் செய்ய புறப்பட்ட என் மைந்தன் பற்றி எழுதியிருந்தேன். அந்தத் துயரம் ஆறவில்லை. ஆறாது. காலம் இந்தக் காயத்தை மாற்றும் என்றுதான் நம்பினேன். காயங்கள் தன் கொடூரங்களால் என்னைத்தின்றபடி இருக்க விட்டுவிட்டது காலம். ஆறுதற் சொல் கோர்த்து நெஞ்சுக்கு ஆதரவாய் தோழி ஒருவள் மடல் எழுதியிருந்தாள். “புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்ட கலைஞன் நீங்கள்.எப்படித்துவளலாம்? கூடாது! நிமிர்ந்திருங்கள்” என்று மூன்று பக்க மடலில் ஒருவரி. வார்த்தைகள் பல என்னைக் கூச்சமெழச் [...]